Friday, July 1, 2011

என் முதல் பதிவு

இது என் முதல் பதிவு. ஓர் கவிதையாக........................


ஆயிரம் காலமாய் ஆதவன்
மறைந்தாலும் ஆயினும்
மீண்டூம் உதயமாகும்

காலம் காலமாய்
நிலவு தேய்ந்தாலும்
பௌர்னமிகள் வந்தே தீரும்

இலைகள் உதிர்ந்து மரம்
இளைத்துப்போனாலும்
இல்லையென்றாவதில்லை
வசந்த காலங்கள்

முயற்சி என்பதில் மூர்க்கம் வை
படைத்தவன் மேல் நம்பிக்கை வை
உன்னை இகழ்ந்தவர்களின் பெயர்களை எழுதி வை
உன்னுடன் இருப்பவர்களை உள்ளத்தில் வை
நிமிர்ந்து நில், பார் ஓர் நாள் பூமி உன்னிடம் கேட்டூத்தான்
சுழலவே ஆரம்பிக்கும்

No comments:

Post a Comment